asதமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கான தேர்தலில் கலைப்புலி எஸ்.தாணு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலை, உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தேர்தல் அதிகாரியாகவும், பார்வையாளராகவும் இருந்து தேர்தலை நடத்தினார்.

தேர்தலில் வாக்களிக்க தகுதியுள்ள உறுப்பினர்கள் 967 பேர். இவர்களில் 50 சதவிகிதத்தினர் வெளியூர்களில் இருந்தனர். அவர்கள் நேற்று இரவே சென்னை வந்து தங்கி தங்களது ஓட்டுகளை செலுத்தினர்.

வெற்றி பெற்ற செயற்குழு உறுப்பினர்கள் விபரம் நாளை தெரியவரும்.

Comments

comments