asதிருநங்கைகளை திரைப்படங்களில் தவறாக சித்தரிப்பது சினிமாவில் நீண்டகாலமாக நடந்து வரும் ஒரு விசயம்தான். அதை இப்போது டைரக்டர் ஷங்கரும் தனது ஐ படத்தில் சித்தரித்துள்ளார். அதாவது, விளம்பர படத்தில் நடிக்கும் விக்ரமிற்கு மேக்கப் போடும் வேடத்தில் நடித்துள்ள திருநங்கை விக்ரமை காதலிப்பது போல் காட்சி பண்ணியிருந்தார். அதோடு, விக்ரம் அவரை அருவெருப்போடு தள்ளி விடுவது போன்றும காட்சிகள் இருந்தன. மேலும், அவர் என்ட்ரியாகும் முதல் காட்சியிலேயே விக்ரமும், சந்தானமும் இணைந்து பருத்தி வீரனில் இடம்பெற்ற ஊரோரம் புளியமரம் -என்ற பாடலை பாடி அவரை கலாய்த்தபடி நடித்தனர். சந்தானத்தைப் பொறுத்தவரை பல படங்களில் இதுபோன்று திருநங்கைகளை கலாய்த்து வருகிறார்.

ஆனால் இந்த செயல் திருநங்கைகளை ரொம்பவே பாதித்துள்ளதாம்.

அதனால் திருநங்கைகள் ஒருங்கிணைப்பாளர் பானு என்பவர் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தியில், திருநங்கைகள் மற்றவர்களுக்கு இணையான சாதனைகளை செய்து வந்தபோதும், எங்களை தவறாக பார்க்கும் சமூக கண்ணோட்டம் இன்னும் மாறவில்லை. இந்த நேரத்தில் தொடர்ந்து எங்களை கிண்டல் செய்து படமெடுப்பது மனதை புண்படுததுகிறது. ஆனால் இந்த விசயத்திற்கு சென்சார்போர்டும் உடந்தையாக இருப்பது வேதனையளிக்கிறது.

என்று கூறிப்பிட்டுள்ள பானு, டைரக்டர் ஷங்கரை கண்டிக்கும் வகையில் திருநங்கைகள் சார்பில் அவர் வீடு முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்போகிறோம். அதற்கான ஏற்பாடுகள் தற்போது நடந்து கொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார். இதற்காக, தற்போது வெளியூர்களில் இருந்தும் ஏராளமான திருநங்கைகள் சென்னை நோக்கி படையெடுத்துக்கொண்டிருக்கிறார்களாம்.

Comments

comments