asபொதுவாக தமிழ் சினிமாவில் சில ஹீரோக்களுக்கு நடிக்க வந்த இருபது வருடங்கள் கழித்து வரும் ஆசை தான் ஒரு படத்தை டைரக்ட் செய்யவேண்டும் என்பது.. கமல். விஜயகாந்த், ஆகியோர் படம் இயக்கியதும் அப்படித்தான். ஆனால் வருடத்தில் ஆறு படங்களாவது நடித்துவிடும் மலையாள ஹீரோக்களுக்கு இப்படி ஒரு எண்ணம் துளியும் இருப்பதாக தெரியவில்லை. இருந்தாலும் மலையாள இளம் முன்னணி நடிகரான பிருத்விராஜுக்கு இப்போது இயக்குனராகும் ஆசை வந்துள்ளது..

சினிமாவில் நுழைந்த இந்த பத்து வருடங்களில் கதாநாயகன், வில்லன் என தனது நடிப்பு பயணத்தை தொடர்ந்த பிருத்விராஜ் ‘உருமி’ படம் மூலமாக தயாரிப்பாளராகவும் மாறினார். தற்போது ‘டபுள் பேரல்’ என்கிற படத்தையும் தயாரித்து அதில் ஒரு ஹீரோவாகவும் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் தான் ஒரு படத்தை இயக்க வேண்டும் என்கிற ஆசை அவருக்குள் உதித்துள்ளதாம். இதுபற்றிய அறிவிப்பு விரைவிலேயே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Comments

comments