asஇசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் அறிமுகமாகியுள்ள டார்லிங் படம் பொங்கலுக்கு வெளிவந்தது. நிக்கி கல்ராணி, பாலா, கருணாஸ் நடித்திருந்தனர். சாம் ஆண்டன் இயக்கி இருந்தார். ஐ, ஆம்பள என்ற இரண்டு படங்களுக்கு மத்தியில் இந்த தெலுங்கு ரீமேக் படத்தை தைரியமாக களம் இறக்கியது ஸ்டூடியோ கிரீன் நிறுவனம். தற்போது படத்திற்கு வரவேற்பு கிடைத்திருப்பதைத் தொடர்ந்து 25 தியேட்டர்கள் வரை அதிகப்படுத்தி உள்ளது.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்டூடியோ கிரீன் சக்தி கூறியதாவது: பருத்தி வீரனுக்குப் பிறகு எங்கள் நிறுவனத்திற்கு கிடைத்திருக்கும் வெற்றிப் படம் இது. அதில் நாங்கள் கார்த்தியை அறிமுகப்படுத்தினோம். அதேபோல இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாசை அறிமுகப்படுத்தியுள்ளோம். கார்த்திபோல ஜி.வி.பியும் பெரிய நடிகராக வருவார். தமிழ்நாடு முழுவதும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பல தியேட்டர்களில் காட்சியை அதிகப்படுத்தியிருக்கிறார்கள். 25க்கும் மேற்பட்ட தியேட்டர்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. பெரிய படங்களுக்கு மத்தியில் ரிலீஸ் செய்வதால் பெரிய படங்களின் ரிசல்ட்டை பொறுத்து மறுவாரம்தான் எங்கள் படத்துக்கு கலெக்ஷன் கிடைக்கும் என்று நினைத்தோம். ஆனால் உடனேயே கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. என்றார்.

Comments

comments