asdஎமி ஜாக்சன் நடிப்பில் பொங்கல் வெளியீடாக வெளிவரவிருக்கும் பிரம்மாண்ட படம் ‘ஐ’. இப்படத்தை முடித்த கையோடு சூர்யாவை வைத்து வெங்கட் பிரபு இயக்கும் ‘மாஸ்’ படத்தில் நடிக்க எமி ஜாக்சன் ஒப்பந்தம் ஆனார். இப்படத்தில் இன்னொரு நாயகியாக நயன்தாராவும் ஏற்கெனவே ஒப்பந்தமாகியிருந்தார்.

‘மாஸ்’ படத்தின் போட்டோ ஷூட்டில் எல்லாம் கலந்து கொண்ட எமி ஜாக்சன் திடீரென இப்படத்தில் இருந்து விலகிக் கொண்டார். காரணம் எதுவும் கூறாமல் திடீரென அவர் விலகியது அனைவருக்கும் பெரிய கேள்வியை எழுப்பியது. இதையடுத்து, அவர் நடிக்கும் கதாபாத்திரத்தில் ‘சகுனி’ படத்தில் நடித்த ப்ரணிதா நடிக்க ஒப்பந்தம் ஆனார். தற்போது இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ‘மாஸ்’ படத்தில் இருந்து தான் விலகியதற்கு விளக்கம் அளித்துள்ளார் எமி ஜாக்சன். இதுகுறித்து அவர் கூறும்போது, ஏன் சூர்யா படத்தில் இருந்து திடீரென்று விலகிவிட்டீர்கள் என்று எல்லோரும் என்னிடம் கேட்கிறார்கள். அதனால், எல்லோருக்கும் நான் நேரடியாகவே ஒன்றை சொல்ல விரும்புகிறேன். வெங்கட்பிரபு-சூர்யா கூட்டணியில் உருவாகும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. துரதிருஷ்டவமாக அது அமையவில்லை. ஷங்கர் படத்திற்கு பிறகு வெயிட்டான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கவேண்டும் என்று முடிவு செய்துள்ளேன். தற்போது அந்த வாய்ப்பு அமையாவிட்டாலும், எதிர்காலத்தில் இவர்களுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

Comments

comments