asநடிகர் ஜெயராம் தமிழ், மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்திருப்பவர். மலையாளத்தில் இப்போதும் ஹீரோவாக நடித்துவரும், தமிழில் துணை முதல்வர் படத்தில் கே.பாக்யராஜூடன் இணைந்து இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்திருக்கிறார். அதோடு சில படங்களில் காமெடி கேரக்டர்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், தனது மகன் காளிதாஸை ஒரு பக்க கதை என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகம் செய்திருக்கிறார். இந்த படத்தை நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கிய பாலாஜி தரணீதரன் இயக்கி வருகிறார். இதில் நாயகியாக மேகா ஆகாஷ் என்ற புதுமுகம் நடித்து வருகிறார். தற்போது இப்படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், தான் நடிக்கும் ஒவ்வொரு காட்சியிலுமே சிறப்பாக நடித்து கைதட்டல் வாங்கி வருகிறாராம் காளிதாஸ். இந்த அளவுக்கு அவர் சிறப்பாக நடிப்பதற்கு காரணம், அவர் ஒரு குழந்தை நட்சத்திரமாம். மலையாளத்தில் கொச்சி கொச்சி சந்தோசங்கள், என்டே வீடு அப்புவின்டேயும் போன்ற படங்களில் சிறுவனாக இருந்தபோதே நடித்த காளிதாஸ், 2003ல் வெளியான என்டே வீடு அப்புவின்டேயும் என்ற படத்துக்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்றவராம். அதேபோல், கேரள அரசின் மாநில விருதினையும் அந்த படத்துக்காக பெற்றிருக்கிறார். அதனால், நடிப்பு அவருக்கு சின்ன வயதிலேயே கைவந்த கலையாகி விட்டதாம்.

Comments

comments