saராகவா லாரன்ஸ் இயக்கத்தில் இதற்கு முன் ‘முனி, காஞ்சானா – முனி 2,’ ஆகிய படங்கள் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது. இதில் ‘காஞ்சனா’ திரைப்படம் முனி படத்தை விட வசூலிலும் மிகப் பெரிய அளவிற்கு வெற்றி பெற்றது. தமிழில் இந்தப் படம் வாங்கிய வினியோகஸ்தர்களுக்கு பலத்த லாபத்தைப் பெற்றுத் தந்தது. ‘முனி’ படத்தின் முதல் பாகம் 2007ம் ஆண்டு வெளிவந்தது. இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ், ராஜ்கிரண், வேதிகா, கோவை சரளா மற்றும் பலர் நடித்திருந்தனர். ‘முனி 2 – காஞ்சனா’ திரைப்படம் 2011ம் ஆண்டு வெளிவந்தது. இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ், லட்சுமி ராய், கோவை சரளா, தேவதர்ஷினி மற்றும் பலர் நடித்திருந்தனர். தற்போது உருவாகி வரும் ‘முனி 3 – கங்கா’ படத்தில் ராகலா லாரன்ஸ், டாப்ஸி, கோவை சரளா, தேவதர்ஷினி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

‘முனி 3 – கங்கா’ திரைப்படம் 2012ம் ஆண்டே ஆரம்பமானது. தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வந்தாலும் இடையில் ராகவா லாரன்ஸ் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சில காலம் தடைபட்டு நின்று போனது. அதன் பின் அவர் தேறி வந்ததும் மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பமாகி இடைவிடாமல் நடந்து முடிந்துள்ளது. தற்போது படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம். முந்தைய படங்களை விட இந்தப் படத்தில் பல கிராஃபிக்ஸ் காட்சிகளை வைத்துள்ளார்களாம். அனைத்தும் முடிந்த பிறகு கோடை விடுமுறை ஆரம்பமாகும் போது படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இப்படம்வெளியாக உள்ளது.

Comments

comments