dsஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்து, அனைவரின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ஐ பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவிருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகளுக்காக மும்பை, ஹைதாராபாத் சென்று வந்தார் விக்ரம். ஐ படத்தில் நடித்து முடித்ததும் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கும் பத்து எண்றதுக்குள்ள படத்தில் நடிக்க ஆரம்பித்தார் விக்ரம். கோலிசோடா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய்மில்டன் இயக்கி வரும் படம் இது. இப்படத்தின் படப்பிடிப்பு 80 சதவிகிதம் முடிந்து விட்டதாம்.

அடுத்து இப்படத்திற்காக நேப்பாளத்தில் சில காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளார் இயக்குனர் விஜய் மில்டன். நேபாளத்தில் படப்பிடிப்பு முடிவடைந்ததும் இன்னும் ஒரு சில நாட்களில் இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பும் முடிந்துவிடுமாம். பத்து எண்றதுக்குள்ள படத்தை ஐ பட ரிலீஸுக்கு பிறகு 3 மாதங்கள் கழித்து, அதாவது கோடை விடுமுறை காலத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனராம். த டிரான்போர்ட்டர் என்ற ஆங்கிலப்படத்திலிருந்து தழுவி எடுக்கப்பட்டு வரும் பத்து எண்றதுக்குள்ள படத்தில் விக்ரமுடன் முதல் முதலாக ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார் சமந்தா.

 

Comments

comments