sdரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்க, ஏ.ஆர்.ரகுமான் இசையில் இந்தியாவின் முதல் மோஷன் கேப்சரிங் படமாக உருவான ‘கோச்சடையான்’ திரைப்படம் 2014ம் ஆண்டு மே மாதம் 23ம் தேதி வெளியானது. வசூல் ரீதியாக மிகப் பெரும் வரவேற்பைப் பெறவில்லையென்றாலும் நல்ல முயற்சி என்ற பாராட்டைப் பெற்றது. அப்போதே இந்தப் படத்தை உலகத்தில் உள்ள சில முக்கிய மொழிகளில் வெளியிட உள்ளோம் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. ஆனால், அப்போது நடைபெறாத அந்த வேலைகள் தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளதாம்.

சில அமெரிக்க, ஐரோப்பா நாடுகளிலும், ஆஸ்திரேலியா, மலேசியா உள்ளிட்ட இடங்களிலும் ‘கோச்சடையான்’ தமிழிலேயே வெளியிடப்பட்டு ஓரளவிற்கு நல்ல வசூலைப் பெற்றது. தெலுங்கு, இந்தியில் இந்திய முழுவதும் வெளியிடப்பட்டாலும், மிகப் பெரிய வரவேற்பைப் பெறவில்லை.

தற்போது பல மொழிகளில் டப்பிங் செய்து படத்தின் சர்வதேசப் பதிப்பை வெளியிடும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்களாம். எந்த மொழிகளில் அவை வெளியாக உள்ளது என்பதை தற்போது அதிகாரப்பூவர்மாக அறிவிக்கவில்லை. இருந்தாலும் முன்னர் சொன்னபடி ஆங்கிலம், பிரெஞ்ச், ஸ்பானிஷ், ஜப்பான் மொழிகளில் வெளியாகலாம் என்று தெரிகிறது. இது சம்பந்தமாக படத்தின் வெளியீட்டிற்கு முன் ஒரு அறிவிப்பை படத்தை உலக அளவில் வெளியிடும் மீடியா ஒன் நிறுவனம் தெரியப்படுத்த உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Comments

comments