as‘ஐ’ திரைப்படம் கேரளாவில் மொத்தம் 230க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. கடந்த ஐந்து நாட்களாக ‘ஐ’ திரைப்படம் பல ஊர்களிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறதாம். இதுவரை சுமார் 10 கோடிக்கும் மேல் படம் வசூலை அள்ளியிருக்கும் என்கிறார்கள். ஒரு தமிழ்ப் படம் வெறும் ஐந்து நாட்களிலேயே இந்த அளவிற்கு வசூலை அள்ளியிருப்பது இதுவே முதல் முறையாகும்.

இப்படத்தை குளோபல் யுனைட்டெட் மீடியா என்ற ஒரு புதிய நிறுவனம் சுமார் 6 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியதாம். இப்போது ஐந்து நாட்களுக்குள்ளேயே சுமார் 4 கோடி ரூபாய்க்கும் அதிகமான அசலை மிஞ்சிய கூடுதல் தொகை வசூலாகியுள்ளதாம். கேரளாவைப் பொறுத்தவரையில் தமிழ்ப் படங்கள் என்றால் அது விஜய் படங்கள்தான் அதிகமாக வசூலிக்கும். அந்த சாதனையையும் சேர்த்து ‘ஐ’ படம் முறியடித்துள்ளது என்கிறார்கள்.

விக்ரம், எமி ஜாக்சன் இருவரும் சேர்ந்து கேரளாவில் பல மலையாள சேனல்களிலும், பத்திரிகைகளிலும் பேட்டி கொடுத்து படத்தை பிரமோஷன் செய்ததே இந்த அளவிற்கு படம் வெற்றி பெறக் காரணம் என்கிறார்கள். ‘ஐ’ படத்தின் வெற்றியால் தெலுங்குத் திரையுலகினரைப் போலவே மலையாளத் திரையுலகனிரும் கடும் எரிச்சலில் இருக்கிறார்களாம். விரைவில் ஒன்று கூட தமிழ்ப் படங்களின் உடனடி வெளியீட்டிற்கு ஏதாவது கட்டுப்பாடுகள் விதிக்கலாம் என முடிவு செய்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.

Comments

comments