saநாகார்ஜுனா, கார்த்தி இருவரும் இணைந்து நடிக்க தமிழ், தெலுங்கில் தயாராகும் படம் ஒன்றை தெலுங்கின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வம்சி படிப்பள்ளி இயக்குகிறார் என சில மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தில் கார்த்தி ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கப் போகிறார் என சில மாதங்களுக்கு முன்பு நாமும் செய்தி வெளியிட்டிருந்தோம். அது தற்போது உறுதியாகி உள்ளது. இரு தினங்களுக்கு முன் இது பற்றி ஸ்ருதிஹாசன் ‘கன்ஃபர்ம்’ செய்துள்ளார்.

தமிழில் கார்த்தியின் அண்ணனான சூர்யா ஜோடியாக ‘ஏழாம் அறிவு’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஸ்ருதிஹாசன். தெலுங்கில் சில வெற்றிப் படங்களில் நடித்திருந்தாலும் அங்கும் இன்னும் நாகார்ஜுனா நடிக்கும் படத்தில் அவர் நடித்ததில்லை. நாகார்ஜுனாவும், கார்த்தியும் முதன் முறையாக இணைந்து நடிக்கும் படத்தில், கார்த்தி முதன் முறையாக நேரடித் தெலுங்குப் படத்தில், இதுவரை நடிக்காத இரு நடிகர்களுடன் ஸ்ருதிஹாசனும் இந்தப் படம் மூலம் சேர்வது படத்தைப் பற்றி அதிகம் பேச வைத்து விட்டது.

“எவடு’ படத்தில் கிடைத்த மிகப் பெரிய அனுபவத்திற்குப் பிறகு மீண்டும் வம்சி படிப்பள்ளியின் அடுத்த படத்தில் நாகார்ஜுனா, கார்த்தி ஆகியோருடன் நடிப்பது உற்சாகமாக உள்ளது. மிகவும் வித்தியாசமான மனதிற்கு நெருக்கமான ஒரு கதையில் நானும் பங்கெடுப்பது மகிழ்ச்சியாக உள்ளது,” அந்தப் படத்தில் நடிப்பது குறித்து ஸ்ருதிஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

 

Comments

comments