saசமீப காலமாக மற்ற மொழிப்படங்களில் இருந்து யார் காப்பியடித்திருந்தாலும் அதை சாதாரண ரசிகர்களே இணையதளங்கள் மூலம் கண்டுபிடித்து விடுகின்றனர். இந்த நிலையில், லிங்கா படத்தில் நெக்லஸ் திருட செல்லும் ஒரு காட்சியில், அனுஷ்காவுடன் ஒரு சிறிய அறையில் மாட்டிக்கொள்ளும் ரஜினி, உள்ளேயிருந்தபடியே ஒரு காந்தத்தை வைத்து வெளியில் தொங்கிக்கொண்டிருக்கும் சாவியை எடுத்து அந்த கதவை திற்நது கொண்டு வெளியே வருவார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் அந்த காட்சியை, 1966ல் வெளியான ஹவ் டூ ஸ்டீல் எ மில்லியன் என்ற ஹாலிவுட் படத்தில் இருந்து காப்பியடித்து விட்டதாக இணையதளங்களில் வெளியிட்டு வந்தனர். அதேபோல், க்ளைமாக்ஸில் அனுஷ்காவை வில்லன் கடத்திச்செல்லும அந்த பலூன் காட்சியை 1969ல் சிவாஜி நடித்த சிவந்தமண் படத்தில் இருந்து காப்பியடித்ததாகவும் குறிப்பிட்டு வந்தனர். இந்தநிலையில், சமீபத்தில் ஒரு சேனலுக்கு பேட்டியளிக்க சென்ற கே.எஸ்.ரவிக்குமாரிடம் இந்த காப்பி விவகாரத்தை ஒரு கேள்வியாக அவர் முன் வைத்தபோது, அதை அவர் மறுக்கவில்லை.

அதோடு, லிங்கா படத்தின் காட்சிகளை உதவி இயக்குனர்கள் ஒவ்வொருத்தருமே சொன்னார்கள். அதில் ஒருவர் சொன்னதுதான் காந்தத்தால் சாவியை எடுக்கும் காட்சி. அது ஹாலிவுட் படத்தில் இடம்பெற்றதுதான் என்று ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் தமிழ் படத்தில் இருநதே திருடப்பட்டதாக கூறப்பட்ட பலூன் காட்சி பற்றி அவர் எதுவும் சொல்லவில்லை.

 

Comments

comments