saகல்யாணம் முடிந்தால் கல்தாஎவ்வளவு பெரிய ஹீரோயினாக இருந்தாலும், அவர்களுக்கு ரசிகர்களிடம் அதிகமான வரவேற்பு கிடைத்தாலும், கல்யாணம் முடிந்தால் கழற்றி விடும் நடைமுறை, கோலிவுட்டில் தொடர்கிறது. லேட்டஸ்டாக இந்த பரிதாப லிஸ்ட்டில் சேர்ந்துள்ளவர், அமலா பால்.

தனுஷ் நடிக்கும் புதிய படத்தில், அமலா பால் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால், கல்யாண சென்டிமென்ட் காரணமாக, இப்போது அந்த படத்திலிருந்து அமலா பால் கழற்றி விடப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, தற்போது சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். இதேபோல், த்ரிஷாவுக்கும், தொழிலதிபர் வருண் சுப்ரமணியனுக்கும் திருமணம் நடக்க உள்ளதால் அவருக்கும் வாய்ப்பு குறைந்துள்ளது.

Comments

comments