saதயாரிப்பாளர் ஆன பிறகு படு பிஸியாகிவிட்டார் விஷால். படத்தில் நடிப்பதோடு நின்றுவிடாமல், டப்பிங், சென்சார், படத்தின் புரமோஷன் வேலை என சகல வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார். சுந்தர்.சி. இயக்கத்தில் விஷால் நடித்த ஆம்பள படம் பொங்கலை முன்னிட்டு உலகமெங்கும் வரும் 15ஆம் தேதி திரைக்கு வருகிறது. எனவே ஆம்பள படத்தின் ரிலீஸ் பணியில் படுபிஸியாக இயங்கி வருகிறார் விஷால். ஏற்கனவே அவர் தயாரித்த பூஜை படத்தை வேந்தர் மூவீஸ் நிறுவனத்திடம் விற்றார். அதனால் பூஜை படம் வெற்றிகரமாக ஓடியும் விஷாலுக்கு லாபம் கிடைக்கவில்லை. எனவே இந்தப்படத்தை வேந்தர் மூவீஸ் நிறுவனத்துக்குக் கொடுக்கவில்லை. மதுரை அன்பு மூலம் தானே டீல் பண்ணிக்கொள்வதாக சொல்லிவிட்டாராம் விஷால்.

பூஜை படத்தின் தமிழக விநியோக உரிமையை வாங்கிய வேந்தர் மூவீஸ் நிறுவனத்துக்கு சில கோடிகள் நஷ்டம். அதை ஈடுகட்ட அந்நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடித்துக் கொடுத்து கடனை அடைக்க இருக்கிறார் விஷால். இந்தப்படத்தை சுசீந்திரன் இயக்குகிறார். பாண்டியநாடு ப்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து சுசீந்திரன், விஷால் இணையும் படம் இது. இதில் அவருக்கு ஜோடியாக முதல்முறையாக காஜல் அகர்வால் நடிக்கிறார். காஜலுக்கு ஒன்றரை கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 13ஆம் தேதி முதல் சுசீந்திரன் இயக்கும் இந்தப் படத்திற்காக விஷாலுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார் காஜல் அகர்வால். இப்படத்தின் முதல் ஷெட்யூல் ஹைதராபாத்தில் துவங்குகிறது.

தற்போது ஹரிஷ் கல்யாண், ஸ்ரீ, சம்க்ருதி, ஹரிஷ் உத்தமன் ஆகியோர் நடிக்கும் படமொன்றை இயக்கி வருகிறார் சுசீந்திரன் . இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகளை முடித்துவிட்டு ஜனவரி 13ஆம் தேதி முதல் விஷால் படத்தை இயக்க வருகிறார் சுசீந்திரன்.

 

Comments

comments