asசினிமா உலகைப்பொறுத்தவரை எத்தகைய முன்னணி ஹீரோக்களாக இருந்தாலும் அவர்கள் நடித்த படம் ஒரே மாதத்தில் வெளியாவது எனபது அரிதான விசயம்தான். ஒரு படம் வெளியாகி அடுத்த இரண்டொரு மாதங்களுககு பிறகுதான் அடுத்த படத்தை வெளியிடுவார்கள். ஆனால், தனுஷ் தற்போது நடித்துள்ள ஷமிதாப், அனேகன் என்ற இரண்டு படங்களுமே பிப்ரவரியில் வெளியாகிறது. தற்போதைய நிலவரப்படி அஜீத்தின் என்னை அறிந்தால் பிப்ரவரி 5-ந்தேதியில் வெளியாக இருக்கிறது. அதற்கடுத்த நாள் அமிதாப்பச்சனுடன் இணைந்து தனுஷ் நடித்துள்ள ஷமிதாப் வெளியாகிறது. ஆனால் அப்படம் வெளியாகி ஒரே வாரத்தில் அதாவது பிப்ரவரி 13-ந்தேதியே அனேகன் வெளியாகிறது.

ஆக, ஒரே வாரத்திற்குள் அடுத்த படமும் வெளியாவதால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கும் தனுஷ், எனது சினிமா பயணத்தில் இப்படி அடுத்தடுத்து நான் நடித்த படங்கள் வெளியாவது இதுவே முதல்முறை. அதோடு, இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுடன் நான் நடித்திருக்கிறேன் என்பது இன்னும் மகிழ்ச்சியான விசயம். அந்த வகையில் என்வாழ்க்கையில் மறக்க முடியாத தருணத்தில் இப்போது நான் இருக்கிறேன் என்று தனது மனநிலையை வெளிப்படுத்தியுள்ளார் தனுஷ்.

Comments

comments