asவிஜயசேதுபதி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கியவர் பாலாஜி தரணீதரன். அதையடுத்து இன்னொரு படத்தை இயக்கும் முயற்சியில் அவர் இறங்கியபோது சாதகமாக சூழ்நிலை ஏற்படவிலலை. அதனால் அந்த படத்தை அப்படியே விட்டு விட்டு, தற்போது மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸை வைத்து ஒரு பக்க கதை என்ற படத்தை இயக்கி வருகிறார். முந்தைய படத்தைப்போலவே இந்த ஒரு பக்க கதையும் ஒரு பக்காவான கதையில் உருவாகிறதாம். அதோடு, பெரிய அளவில் செலவு இல்லையாம். ஒரே இடத்தைச்சுற்றி நடக்கும் கதை என்பதால், சென்னையிலுள்ள அடையாறில் இந்த படத்துக்காக காலனி போன்று ஒரு செட்டை அமைத்து ஆரம்பத்தில் இருந்தே படமாக்கி வருகிறார்கள்.

மேலும், பெரிய நடிகர்கள் என்ற யாரும் இல்லாததால் அப்படத்தில நடிப்பவர்கள் அனைவருமே ஸ்பாட்டில் எந்நேரமும் தயார் நிலையில் இருக்கிறார்களாம். அதனால் இதுவரை 20 நாட்கள் படபபிடிப்பு நடத்தியுள்ள பாலாஜி தரணீதரன், பாதி படப்பிடிப்பை முடித்து விட்டாராம். பிப்ரவரி 20ந்தேதி வரை அந்த செட்டில்தான் படப்பிடிப்பு நடக்கிறதாம். அதையடுத்து, பாடல் காட்சிகளுக்காக வெளிநாடு செல்ல வேண்டும் என்ற சிலர் சொன்னபோது, அதெல்லாம் தேவையில்லை. அதைகூட சென்னையை சுற்றியே படமாக்கிக்கொள்ளலாம் என்று தயாரிப்பாளருககு செலவு வைக்காமல் பட்ஜெட்டை சுருக்கிக்கொண்டாராம் இயக்குனர்.

Comments

comments