asஒருவர் மட்டுமே நடிக்கும் சாதனை படங்கள் தமிழில் நிறைய தயாராகி வருகிறது. அதில் ஒன்று, யாருக்காக. இந்தப் படத்தில் வெங்கி என்ற வழக்கறிஞர் மட்டும் நடித்துள்ளார். கர்நாடக, தமிழ்நாடு எல்லையில் உள்ள தேவர் பெட்டா உள்ளிட்ட கர்நாடக, தமிழ்நாடு, ஆந்திர பார்டர்களில் உள்ள அடர்ந்த காடுகளில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள்.
கதை வசனம் பாடல்களை தென்றல் தியாகராஜன் எழுதியுள்ளார், திரைக்கதை அமைத்து இயக்கி உள்ளார் எஸ்.பி.சுவாமி, மகிபாலன் ஒளிப்பதிவு செய்துள்ளார், மகேஸ்வரன் இசை அமைத்துள்ளார்.

நாட்டுக்காக போராடும் போராளி குழுக்களின் தலைவர் பிரம்மன். தன் சக போராளியால் காட்டிகொடுக்கப்பட்டு சிறைக்கு செல்கிறார். சிறையிலிருந்து விடுதலையாகி வரும்போது எல்லா போராளிகளும் எதிரிகளுடன் சேர்ந்து நாட்டுக்கு துரோகம் செய்கிறார்கள். அவர்களை குண்டு வைத்து அழிக்க நினைக்கிறார் பிரம்மன். இதனால் பொதுமக்களும் கொல்லப்படுவார்கள் என்பதால் அகிம்சை வழியில் அவர்களை எதிர்த்து போராடுகிற கதை. ஒருவர் மட்டுமே நடிக்கிறார் மற்ற கேரக்டர்களின் வசனம் மட்டுமே கேட்குமாம்.

Comments

comments