asபொங்கலை முன்னிட்டு கடந்த 14 ஆம் தேதி வெளியான ஷங்கரின் ஐ திரைப்படம் வெளியான அத்தனை இடங்களிலும் வசூலில் சாதனை படைத்து வருகிறது என்று சொல்கிறார்கள் விநியோகஸ்தர்கள். ஐ திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 600க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. வெளியான அத்தனை தியேட்டர்களிலும் கடந்த 5 நாட்களாக ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் இப்படம் 5 நாளில் 40 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளதாக சொல்கிறார்கள்.

ஆந்திராவில் 5 நாட்களில் 25 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளதாம். லிங்கா உட்பட இதுவரை அங்கு வெளியான அத்தனை தமிழ் படங்களின் வசூலையும் ஐ முறியடித்துள்ளதாம். ஆந்திராவில் வெளியான ரஜினியின் லிங்கா திரைப்படத்தின் முதல் நாள் வசூல் 5.86 கோடிதான்! ஷங்கரின் ஐ திரைப்படம் முதல் நாளில் 7 கோடி ரூபாய் வசூல் செய்து லிங்காவின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது! இதைப் போலவே கேரளாவிலும் ஐ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

அங்கு 220-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகியுள்ள ஐ 5 நாட்களில் 8 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாம்! ஆந்திராவைப்போலவே, கேரளாவிலும் இதுவரை வெளியாகி வசூல் சாதனை செய்த அத்தனை தமிழ்ப்படங்களின் ரெக்கார்டையும் ஐ முறியடித்துள்ளது. கர்நாடகாவில் 5 நாட்களில் 5 கோடி வசூல் செய்திருக்கிறது – ஐ படம்.இந்தியாவில் மட்டும் 5 நாட்களில் 78 கோடி வசூல் செய்துள்ளது – ஐ. வெளிநாடுகளில் வசூலான தொகையையும் சேர்த்தால் 100 கோடியைத் தாண்டும் என்று சொல்கிறார்கள்.ஐ படத்தின் வசூல் பற்றிய இந்த தகவல்களை மற்றொரு சாரர் மறுக்கின்றனர். 5 நாட்களில் 40 கோடி வசூல் செய்திருந்தாலே அதிகம், பப்ளிசிட்டிக்காக வசூல் விவரத்தை கூடுதலாக சொல்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டுகின்றனர்.

 

Comments

comments