asமதுமிதா இயக்கும், ”மூணே மூணு வார்த்தை” படத்தின் மூலம் இசை அமைப்பாளராகி இருக்கிறார் கார்த்திகேய மூர்த்தி. சில ஆல்பங்களுக்கு இசை அமைத்துள்ள இவர் இசை அமைப்பாளராக அறிமுகமாகும் முதல் படம் இது. இந்தப் படத்தின் முதல் பாடல் வெளியீட்டு விழா வேளச்சேரி லக்ஸ் திரையரங்கு வளாகத்தில் நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கார்த்திகேய மூர்த்தி ஏ.ஆர்.ரகுமானை போலவே இருக்கிறார். அவரைப்போல புகழ்பெற வேண்டும் என்ற வாழ்த்தினார்.

அதன் பின்னர் அடுத்த பாடல் வெளியீட்டு விழா சைதாப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடந்தது. அதில் கலந்து கொண்ட கார்த்திகேய மூர்த்தி ஏ.ஆர்.ரகுமான் போன்றே உடை அணிந்து வந்தார். அதோடு அவரைப்போன்ற மேனரிசம், நடை, ஸ்டைல், மேடையில் பாடும்போது சின்னதாக நடனம் ஆடுவது. கையை வானத்தை நோக்கி நீட்டிப் பாடுவது என அச்ச அசலாக ஏ.ஆர்.ரகுமான் போன்றே நடந்து கொண்டார். எல்லா புகழும் இறைவனுக்கே என்று மட்டும் சொல்லவில்லை.

பொதுவாக புதிதாக வருகிற இசை அமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரகுமானின் பாடல்களை காப்பி அடிப்பார்கள். லேசாக அவரின் தோற்ற சாயல் இருப்பதால் ஏ.ஆர்.ரகுமானின் தோற்றதையும் மேனரிசத்தையும் இவர் காப்பி அடிப்பதாக விழாவுக்கு வந்த பொதுமக்கள் பேசிக் கொண்டார்கள்.

 

Comments

comments