asஎஸ்.ஜே.சூர்யா இயக்கி தயாரித்து இசையமைத்து ஹீரோவாக நடித்திருக்கும் இசை படம் கடந்த இரண்டு வருடங்களாக முடங்கிக்கிடந்தது. பல போராட்டங்களுக்குப் பிறகு ஒருவழியாக நேற்று உலகம் முழுவதும் ரிலீஸாகிவிட்டது இசை படம். மூன்று மணி நேரத்துக்கு மேல் ஓடுவதால் முன்பாதியில் பொறுமையை சோதிப்பதாகவும், கடைசி முப்பது நிமிடத்தில் மிரட்டிவிட்டார் எஸ்.ஜே.சூர்யா என்றும் ரசிகர்களின் விமர்சனத்தை சந்தித்திருக்கிறது. ஆனாலும் வர்த்தக ரீதியில் வெற்றியடைய சாத்தியம் அதிகமிருப்பதாக சொல்லப்படுகிறது.

இதற்கு முன் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பல அவதாரங்களை எடுத்த எஸ்.ஜே.சூர்யா இசை படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் புதிய முகம் காட்டினார்.

எஸ்.ஜே.சூர்யாவுக்கு இயல்பிலேயே இசைஞானம் அதிகம் உண்டு. இரண்டு இசையமைப்பாளர்களுக்கிடையே நடக்கும் ஈகோ மோதல்களை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இசை படத்துக்கு இசை அமைத்ததன் மூலம், அதை தக்க சமயத்தில் பயன்படுத்தி இசை படத்தில் ஹிட் பாடல்களைக் கொடுத்திருக்கிறார்.

அது சரி..இசை படத்தை அடுத்து எஸ்.ஜே.சூர்யாவின் அடுத்தப்படம் எது?

இசை படத்தின் புரோமேஷனுக்காக எஸ்.ஜே.சூர்யா பேசும்போது குறிப்பிட்ட ஒரு விஷயத்தையே இதற்கான பதிலாக எடுத்துக்கொள்ளலாம். என் இயக்கத்தில் விஜய் நடித்து கிட்டத்தட்ட 10 வருடங்களாகிவிட்டன. ஆனாலும், இசை படத்தின் ஆடியோ விழாவிற்கு நான் அழைத்தபோது எந்தவித மறுப்பும் சொல்லாமல் சந்தோஷமாக வந்திருந்து ஆடியோவை வெளியிட்டார். இத்தனை உயரங்களுக்கு சென்றபிறகும் அவரின் இந்த எளிமை வியக்க வைக்கிறது. மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என நான் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்! என்று விஜய் பற்றி குறிப்பிட்டிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.

 

Comments

comments