asஎஸ்.ஏ.சந்திரசேகர் தற்போது இயக்கி வரும் படம் டூரிங் டாக்கீஸ். இரண்டு கதைகள் கொண்ட இந்தப் படத்தில் ஒரு கதையின் நாயகனாக எஸ்.ஏ.சந்திரசேகரே நடிக்கிறார். மற்றவர்கள் அனைவரும் புதுமுகங்கள். காஷ்மீரில் இளம் வயதில் தான் தொலைத்த காதலியை தேடுகிற கதை. எஸ்.ஏ.சந்திரசேகரின் ஸ்டார் மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இளையராஜா இசை அமைத்துள்ளார்.

இந்தப் படத்தை கடந்த 2 வருடங்களுக்குமேலாக சத்தமே இல்லாமல் இயக்கி வருகிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். வணிக ரீதியான படங்களை இயக்கும் எஸ்.ஏ.சி, இதனை தனது கனவு படமாகவும், லட்சிய படமாகவும் இயக்கி வருவதாக தெரிவித்திருந்தார். இதுவரை படத்தின் புகைப்படங்களையோ, டிசைன்களையோ, டிரைலரையோ, பாடலையோ வெளியிடவில்லை. இந்த நிலையில் படம் வருகிற 30ந் தேதி வெளிவர இருப்பதாக தெரிகிறது.

 

Comments

comments