asஅஜீத் நடித்த என்னை அறிந்தால் படம் பலமுறை ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு தற்போது பிப்ரவரி 5ந் தேதி வெளிவர இருப்பதாக சொல்லியிருக்கிறார்கள். சமீபத்தில் தணிக்கை செய்யப்பட்ட படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். இந்த சான்றிதழால் படத்திற்கு வரிவிலக்கு கிடைக்காது. மேலும் 30 சதவிகித வசூலை வரியாக கட்ட வேண்டும் என்பதால் படத்தை அதிகவிலை கொடுத்து விநியோகஸ்தர்கள் வாங்க மாட்டார்கள். இதனால் யு சான்றிதழ் கேட்டு ரிவைசிங் கமிட்டிக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள்.

ரிவைசிங் கமிட்டியினர் வருகிற 27ந் தேதி பார்க்கிறார்கள். ஒரு சில கட்டுகள் கொடுத்து அவர்கள் யு கொடுக்கலாம் என்று தெரிகிறது. ஒரு வேளை ரிவைசிங் கமிட்டியும் யுஏ தான் என்று சொன்னால் படம் 5 தேதி வெளிவருவதில் சிக்கல் வரும். பின்னர் தயாரிப்பாளர் மும்பையில் உள்ள டிரிபியூனலுக்கு செல்வார். டிரிபியூனல் உறுப்பினர்கள் படம் பார்க்க பத்து முதல் 15 நாட்கள் வரை ஆகலாம்.

டிரிபியூனில் யு கிடைக்கும் வாய்ப்பு அதிகம். அப்படி கிடைக்கும் பட்சத்தில் அதன் பிறகே வரிவிலக்கு பெற விண்ணப்பிக்க முடியும். வரிவிலக்கு கமிட்டியினர் படத்தை பார்த்து என்.ஓ.சி கொடுக்க இரண்டு மூன்று நாட்கள் ஆகும். இதனால் படம் மேலும் தள்ளிப்போக வாய்ப்பிருக்கிறது. ரிவைசிங் கமிட்டி யு கொடுத்தால்தான் என்னை அறிந்தால் 5ந் தேதி ரிலீசாகும்.

 

Comments

comments