asகௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் த்ரிஷா அனுஷ்கா நடித்து வரும் ‘என்னை அறிந்தால்’ படத்தை பொங்கல் ரிலீசாக திரைக்கு கொண்டுவர திட்டமிட்டிருந்தனர்.

பொங்கலுக்கு சில நாட்களே இருந்தநிலையில், இப்படத்தின் ரிலீஸ் ஜனவரி 29-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக தயாரிப்பாளர் தரப்பிலிருந்து அறிவிக்கப்பபட்டது.

தல பொங்கல் கொண்டாட காத்திருந்த அஜித்தின் ரசிகர்கள் அப்ஸெட்டானார்கள்.

என்னை அறிந்தால் படத்தின் பட பணிகள் திட்டமிட்டபடி முடிவடையாததினால் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துவிட்டதாக தயாரிப்பாளர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டாலும்… உண்மை அதுவல்ல!

என்னை அறிந்தால் படப்பிடிப்பின்போது, அஜித்துக்கும் கௌதம் மேனனுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு ஏற்பட்டது.

அதன் காரணமாக அஜித் 5 நாட்கள் படப்பிடிப்புக்கு வரவில்லை, இந்த பிரச்சனை காரணமாக படப்பிடிப்பு பணிகள்பாதிக்கப்பட்டதால்தான் என்னை அறிந்தால் ஜனவரி 29 அன்று தள்ளிவைக்கப்பட்டதாக நமக்குக் கிடைத்த நம்பத்தகுந்த தகவலின் செய்திகளில் அடிப்படையில் அப்போது செய்திகள் வெளியிட்டோம்.

அதன் பிறகு என்னை அறிந்தால் ஜனவரி 29 அன்று வெளிவரும் என்று தயாரிப்பாளர் சொல்லி வந்தார். அஜித் ரசிகர்களும் அதை நம்பி ஆவலோடு காத்திருந்தனர்.

இந்நிலையில், என்னை அறிந்தால் படத்தில் பணிபுரியும் டெக்னீஷியன்களே…என்னை அறிந்தால் பட பணிகள் நடக்கும் வேகத்தைப் பார்த்தால் ஜனவரி 29-ஆம் தேதிக்கு படம் ரிலீஸ் ஆவது டவுட்டுதான் என்று நம்மிட் தெரிவித்த தகவலின் அடிப்படையில் சில தினங்களுக்கு முன்பு அதாவது கடந்த 20 ஆம்தேதி, என்னை அறிந்தால் பட ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா?-வெளிச்சத்துக்கு வந்த சீக்ரெட்! என்ற தலைப்பில் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தோம்.

நாம் வெளியிட்ட செய்தி தற்போது உண்மையாகி இருக்கிறது.

யெஸ்.. என்னை அறிந்தால் படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. பிப்ரவரி 5 ஆம் தேதி ரிலீஸ் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது!

Comments

comments