asகௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் என்னை அறிந்தால் படம் பொங்கல் ரிலீசாக திரைக்கு வரவிருந்தது. பொங்கலுக்கு சில நாட்களே இருந்தநிலையில், இப்படத்தின் ரிலீஸ் 29-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. என்னை அறிந்தால் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முடிவுறாததினால் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துவிட்டதாக தயாரிப்பாளர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது. அதே சமயம், அஜித்துக்கும் கௌதம் மேனனுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக படப்பிடிப்பு பணிகள் பாதிக்கப்பட்டதால்தான் என்னை அறிந்தால் ஜனவரி 29 அன்று தள்ளிவைக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், தற்போது என்னை அறிந்தால் படத்தின் கடைசிகட்ட வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. ரிலீஸ் தேதிக்கு இன்னும் சில தினங்களே உள்ளநிலையில் என்னை அறிந்தால் வேலைகள் முடிந்து படம் வெளியாகுமா என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. என்னை அறிந்தால் படம் வருகிற 21-ஆம் தேதி சென்சாருக்கு செல்லவிருக்கிறது.

சென்சார் முடிந்ததும் திட்டமிட்டபடி வருகிற 29-ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்யவிருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் ஏ.எ.ம்.ரத்னம் அதிகாரபூர்வாக அறிவித்துள்ளார்.

கௌதம் மேனன் இயக்கியுள்ள இப்படத்தில் அஜித்துடன் அனுஷ் கா, த்ரிஷா, அருண் விஜய், பார்வதி மேனன் முதலானோர் நடிக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். தற்போதைய சூழலில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள ஒரே படம் என்னை அறிந்தால் படம்தான்.

Comments

comments