sa

அஜித் நடிக்கும் என்னை அறிந்தால், ஷங்கர் இயக்கும் ஐ இரண்டு படங்களுமே பொங்கலுக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே தியேட்டர்காரர்களுக்கு செம டென்ஷன்.

என்னை அறிந்தால், ஐ இரண்டில் ஒரு படம் மட்டுமே பொங்கலுக்கு வெளிவரும்..அந்த ஒரு படம் எது என்று தெரியாமல் குழப்பத்தில் இருந்தனர்.

சம்மந்தப்பட்ட படங்களின் தயாரிப்பாளர்களைக் கேட்டால், ”நம்ம படம் கண்டிப்பாக ரிலீஸ்…!” என்று கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்தனர்.

இதனால், எந்தப் படத்துக்கு தியேட்டரை பிளாக் பண்ணுவது என்று தெரியாமல் மேலும் மண்டையை பிய்த்துக்கொண்டனர் தியேட்டர்காரர்கள்.

இதற்கிடையில், ‘அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும்’ என்பதுபோல், ஐ படத்துக்கு உள்ள பிரச்சனை காரணமாக கண்டிப்பாக அந்தப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகாது…எனவே அந்தப்படத்துக்கு புக் பண்ணப்பட்ட தியேட்டர்களில் நம்ம படத்தை ரிலீஸ் செய்யலாம் என்ற நல்லெண்ணத்தில் கொம்பன் போன்ற படங்களும் பொங்கலுக்கு ரிலீஸ் என சீன் காட்டின.

ஏற்கனவே மதுரை அன்புவின் ஆதரவு பெற்ற வேட்பாளராக ஆம்பள படமும் களத்தில் உள்ளது.

இப்படியான இடியாப்ப சிக்கலில் என்னை அறிந்தால், ஐ இரண்டில் எந்தப் படம் ரிலீஸ் ஆகப்போகிறது?

எந்தப் படம் ஜகா வாங்கப்போகிறது? என்ற சஸ்பென்ஸ் நீடித்து வந்தது.

புத்தாண்டு செய்தியாக தற்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

‘என்னை அறிந்தால்’ பொங்கலுக்கு ரிலீஸ் இல்லை! என்பதே அந்த செய்தி.

ஜனவரி 29 ஆம் தேதிக்கு ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளனர்.

ஏன்..என்னாச்சு?

கடந்த வாரம் அஜித்துக்கும் இயக்குநர் கௌதம் மேனனுக்கும் இடையில் ஏற்பட்ட உரசல் காரணமாக என்னை அறிந்தால் படப்பிடிப்பு நான்கு நாட்கள் ரத்து செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாய் பல பணிகள் திட்டமிட்டபடி நடக்காமல் போனது.

பொங்கலுக்குள் படம் ரெடியாகாது என்ற நிலைமை ஏற்பட்டதால் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துவிட்டார்களாம்.

Comments

comments