xcvகௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘என்னை அறிந்தால்’ டீசர் நேற்று புத்தாண்டு பிறந்த நிமிடத்தில் யு டியூப் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. சரியாக 24 மணி நேரத்திற்குள்ளாகவே 10 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து , தற்போது 14 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை இந்த டிரைலர் ரசிக்க வைத்துள்ளது. அது மட்டுமல்லாது 45,000க்கும் மேற்பட்டோர் இந்த டிரைலருக்கு ‘லைக்’கும் கொடுத்துள்ளார்கள்.

சில வாரங்களுக்கு முன் வெளிவந்த ‘என்னை அறிந்தால்’ டீசர் வெளியான சில மணி நேரங்களுக்குள் 10 லட்சம் பார்வையாளர்களைக் கடந்தும், 50,000 ‘லைக்’குகளைப் பெற்றும் புதிய சாதனை ஒன்றைப் படைத்திருந்தது. அதன் பின் இந்திய அளவிலும் அதிக ‘லைக்’குகளைப் பெற்ற டீசர் என்ற பெருமையப் பெற்றது. ‘என்னை அறிந்தால் ‘ டீசருக்கு இதுவரை 90,000க்கும் மேற்பட்ட ‘லைக்’குகள் கிடைத்துள்ளன.

தற்போது அந்த சாதனையை ‘என்னை அறிந்தால்’ டிரைலர் முறியடித்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டிரைலருக்காக ஹாரிஸ் ஜெயராஜ் அமைத்துள்ள பின்னணி இசை பரபரப்பாக இல்லையென்றாலும் அஜித்தின் ஆக்ஷன் நடிப்பு அவரது ரசிகர்களை அதிகமாகக் கவர்ந்துள்ளது. நேற்று புத்தாண்டு விடுமுறை தினமாக இருந்தாலும் லட்சக்கணக்கானோர் டிரைலரைப் பார்த்துள்ளனர், இன்னும் சில நாட்களில் இந்த டிரைலரின் ‘ரீச்’ வேறு விதமாக இருக்கும் என்று அஜித் ரசிர்கள் சொல்லி வருகிறார்கள்.

விஷால் நடிக்கும் ‘ஆம்பள’ படத்தின் டிரைலரும் நேற்று வெளியிடப்பட்டது. அந்த டிரைலரை இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர்தான் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘என்னை அறிந்தால்’ படத்தின் வெளியீடு இரு வாரங்கள் தள்ளிப் போவதால் என்ற செய்தி அஜித் ரசிகர்களை மிகப் பெரும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்று படத்தின் விளம்பரத்திலும் ‘இம்மாத வெளியீடு’ எனப் போட்டு அதை உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

 

Comments

comments