asகடந்த ஆண்டு ரசிகர்கள், மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிகம் புழங்கிய வார்த்தை சூப்பர் ஸ்டார் ரஜினி, விஜய், அஜீத்தின் பன்ஞ் டயலாக்கோ, சந்தானம், சூரி, வடிவேலுவின் காமெடி டயலாக்கோ, விஜயகாந்த், டி.ராஜேந்தர் அரசியல் டயலாக்கோ இல்லை. லட்சுமி ராமகிருஷ்ணனின் “என்னம்மா இப்படி பண்ணீங்களேம்மா”தான்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அவர் நடத்தும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பங்கேற்பாளர்களை பார்த்து அவர் அடிக்கடி கூறும் இந்த டயலாக்கை அப்படியே கிண்டல் செய்து விஜய் டி.வியில் சிரிச்சா போச்சு நிகழ்ச்சியில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பினார்கள். அந்த நிகழ்ச்சி யூ டியூப்பில் வைரலாகி பட்டைய கிளப்ப… தமிழர்கள் வாழும் நாடுகள் அனைத்தும் “என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா…” பாப்புலரானது. அண்மையில் வெளிவந்த டார்லிங் படத்தில் அதில் நடித்தவர்களை வைத்தே அதை கிண்டல் செய்திருந்தார்கள். வெளிவரப்போகும் சில படங்களிலும் இந்த டயலாக் இடம்பெற இருக்கிறது.

இப்போது அந்த டயலாக்கையே டைட்டிலாக வைத்து ஒரு படம் தயாரிக்கிறார்கள். பர்ஸ்ட் பிரேம் என்ற நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை புதுமுகம் கங்காதரன் என்பவர் எழுதி, இயக்குகிறார். பிரதாப் ஒளிப்பதிவு செய்கிறார், ஜெரால்டு ஜெயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். புதுமுகங்கள் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் வேகமாக நடந்து வருகிறது.

Comments

comments