asகமல்ஹாசனின் உத்தம வில்லன் படத்தின் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகளை அமெரிக்காவில் முடித்துவிட்டு வந்த கமல் தற்போது டப்பிங் பேசி வருகிறார். தான் டப்பிங் பேசும்போது மட்டுமல்ல, மற்ற நடிகர்கள் டப்பிங் பேசும்போது அப்படத்தின் இயக்குநரைப்போல் அருகில் இருந்து கவனித்து வருகிறார் கமல். தற்போது நாசர் டப்பிங் பேசி வருகிறார். கமலும் உடனிருந்து மெருகேற்றி வருகிறார். ஜிப்ரான் இசை அமைத்துள்ள உத்தமவில்லன்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வருகிற மார்ச் மாதம் 1-ஆம் தேதி நடக்கவிருக்கிறது.

இசை வெளியீடு முடிந்து சரியாக ஒரு மாதம் கழித்து உத்தம வில்லன் படத்தை ஏப்ரல் 2-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். கன்னட நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ள இப்படத்தில் கமல்ஹாசனுடன் ஆன்ட்ரியா, பூஜாகுமார், பார்வதி மேனன், ஊர்வசி, இயக்குனர்கள் கே.பாலச்சந்தர், கே.விஸ்வநாத், ஜெயராம் முதலானோர் நடித்துள்ளனர். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறது உத்தமவில்லன்.

இப்படம் வெளியாகும் ஏப்ரல்-2 ஆம் தேதியன்றுதான் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்து தயாரித்துள்ள நண்பேன்டா படமும் ரிலீசாகவிருக்கிறது. எனவே இரண்டு பட நிறுவனங்களும் இப்போதே தியேட்டர்களை வளைக்கும் வேலையை தொடங்கிவிட்டனர்.

 

Comments

comments