dfசென்னை, கோடம்பாக்கம், ரங்கராஜபுரத்தை சேர்ந்தவர் அர்ச்சனா, வயது 25. இவர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். இவர் நடிகர் விஜய்யை சந்திக்க வேண்டும் என்று குடும்பத்தாருடன் கேட்டுள்ளார். இதை அர்ச்சனாவின் பெற்றோர்கள், ரங்கராஜபுரம் விஜய் ரசிகர்களிடம் தெரிவித்துள்ளனர். இந்த செய்தி எப்படியோ விஜய் காதை எட்டியுள்ளது. இந்த செய்தியை கேட்ட விஜய், அர்ச்சனாவை பார்க்க சென்றார். அதுவும் அவரது பிறந்தநாளான 30.12.2014 அன்று அர்ச்சனாவை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து கூறியதோடு அந்த பெண்ணிடம் பேசி மகிழ்ந்தார். மேலும் அவரது உடல்நிலை பற்றியும் நலம் விசாரித்தார். அர்ச்சனாவை பத்திரமாக பார்த்து கொள்ளும்படி குடும்பத்தாரை கேட்டு கொண்டார்.

விஜய் வந்து தன்னை சந்தித்தது, அர்ச்சனாவை மிகவும் உற்சாகத்தில் ஆழ்த்தியது.

 

Comments

comments