asநடிகர் வினீத்தை ஞாபகமிருக்கிறதா? புதிய முகம், ஜென்டில்மேன், ஆவாரம்பூ, காதல் தேசம், சந்திரமுகி உட்பட ஏராளமான தமிழ் படங்களில் நடித்தவர். தவிர, ஏராளமான மலையாள படங்கள் மற்றும் தெலுங்கு, கன்னட படங்களில் நடித்துள்ள வினீத், நடனக்கலையிலும் தேர்ச்சி பெற்றவர். நடிப்பு போக மற்ற நாட்களில் கிளாசிகல் டான்ஸ் புரோகிராம் நடத்துவதற்காக உலகம் முழுக்க சுற்றிக் கொண்டிருப்பார். அதனாலேயே நடிப்பில் நம்பர் ஒன் இடத்தை அவரால் பிடிக்க முடியவில்லை என்று திரையுலகில் சொல்வார்கள். சில வருடங்களுக்கு முன் கதாநாயகனாக மட்டும் நடித்த வந்த வினீத், சில வருடங்களாக குணச்சித்திர வேடங்களில் நடித்தும் சிறந்து விளங்கி வருகிறார்.

இந்நிலையில், விரைவில் ஒரு படத்தை இயக்க இருக்கிறார் வினீத். ஆயாள் ஞானல்ல (அந்த ஆள் நான் இல்லை) என்று பெயரிடப்பட்டிருக்கும் ஒரு மலையாள படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராகவும் அறிமுகமாக இருக்கிறார். இப்படத்தில் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஃபஹத் ஃபாசில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது. ஆயாள் ஞானல்ல படத்தில் வினீத் நடிக்கவில்லையாம்.

 

Comments

comments