ram-charan-excited-about-the-fight-61a44924இப்போதெல்லாம் வருஷத்துக்கு பெரிய ஹிரோக்களின் படங்கள் ஒன்று ரிலீசாவதே குதிரை கொம்பாகிவிட்டது. ஆனால் தற்போது மெகா பவர் ஸ்டார் ராம்சரணின் இரண்டு படங்கள் 2015ல் கண்டிப்பாக ரிலீஸ் ஆகும் என்று சிரஞ்சீவி அறக்கட்டளை மூலம் அவரது ரசிகர்களுக்கு தெரிவித்திருக்கிறார். சென்ற வருடம் யவடு மற்றும் கோவிந்துடு அந்தாவதலே ஆகிய இரண்டு படங்களில் நடித்தார், இரண்டுமே பாக்ஸ் ஆபிசில் சூப்பர் ஹிட்டாகியது. கிட்டத்தட்ட 3 மாதங்களாக ராம் சரணின் அடுத்த படம் என்னவென்றே தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தார்கள் அவரது ரசிகர்கள். தற்போது ராம் சரண் ஸ்ரீனு வைத்லா இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கவிருக்கிறது, அதனை தொடர்ந்து சுரேந்தர் ரெட்டி இயக்கத்திலும் இன்னொரு படம் நடிக்கவிருக்கிறார் இந்த இரண்டு படங்களுமே 2015ல் ரிலீசாகிவிடுமாம்.

 

Comments

comments