asஇயக்குனர் மேஜர் ரவி சினிமாவில் நுழைவதற்கு முன் ராணுவத்தில் பணியாற்றியவர். அதனால் ராணுவ சம்பந்தப்பட்ட விஷயங்களை அவர் படமாக்கும்போது அதில் லாஜிக்கும் சரியாகவே இருக்கும்.. இதுவரை ராணுவ படங்களாக இயக்கிய மேஜர் ரவி அதில் இந்திய – பாகிஸ்தான் வீரர்களின் சண்டையைத்தான் சொல்லியிருந்தார். ஆனால் தற்போது அவர் இயக்கியுள்ள, ஜன-23ல் வெளிவரவுள்ள ‘பிக்கெட்-43′ படத்தில் இந்திய-பாகிஸ்தான் வீரர்களுக்கு இடையேயான நட்பை சொல்லியிருக்கிறாராம்.

எதிரி ராணுவம் என்றாலும் அங்கேயும் சில ‘மனிதர்’கள் இருப்பார்கள் தானே.. போர் அறிவிப்பு காலம் தவிர மற்ற நேரங்களில் எல்லைப்பகுதியில் அவர்கள் நட்புடன் இருக்கமுடியாதா என்ன..? அதைத்தான் இதில் காட்சிப்படுத்தியிருக்கிராராம். வழக்கம்போல இந்தப்படத்திற்கும் அவரது ஆஸ்தான ஹீரோவான மோகன்லாலைத்தான் முதலில் அணுகினாராம் மேஜர் ரவி. ஆனால் லாலேட்டன் தான் பிருத்விராஜை வைத்து பண்ணினால் இன்னும் யூத்தாக இருக்கும் என அவருக்கு வாய்ப்பை மாற்றிவிட்டாராம்.

Comments

comments