asஐ படத்தின் ரிலீஸுக்கு பயந்து பல பெரிய படங்கள் பதுங்கியபோது தைரியமாக தன்னுடைய ஆம்பள படத்தை பொங்கல் அன்று ரிலீஸ் செய்தார் விஷால்.

அவர் எதிர்பார்த்ததுபோலவே ஆம்பள படத்துக்கு மிகப்பெரிய ஒப்பனிங்கும் இருந்தது.

அதைக் கண்டதும் ஆம்பள படம் பெரிய ஹிட் என்ற முடிவுக்கு வந்த விஷால், சக்சஸ் மீட் வைத்து தன் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டார்.

திடீர் திருப்பமாக இரண்டொரு நாட்களில் காட்சி மாறிவிட்டது.

ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்த டார்லிங் படம் பேய் ஓட்டம் ஓட ஆரம்பிக்க, ஆம்பள படத்தின் வசூல் டல்லடிக்க ஆரம்பித்தது.

சில நாட்களிலேயே பல காம்ப்ளக்ஸ் தியேட்டர்களில் டார்லிங் படத்துக்கு காட்சிகள் அதிகரிக்கப்பட்டன. ஆம்பள படத்தின் காட்சிகள் குறைக்கப்பட்டன.

பெரிய தியேட்டர்களில் இருந்து மினி தியேட்டருக்கு ஆம்பள மாற்றப்பட்டது. மினி தியேட்டரிலிருந்து பெரிய தியேட்டருக்கு டார்லிங் ஷிப்ட்டானது.

அதுமட்டுமல்ல, பல ஊர்களில்.. பல தியேட்டர்களிலிருந்து ஆம்பள படம் தூக்கப்பட்டது.

இதனால் கடும் அப்செட்டான விஷால் சில தினங்களுக்கு முன் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணிவிட்டு தொடர்பு எல்லைக்கு வெளியே போய்விட்டாராம்.

குறிப்பிட்ட நாள் அன்று சுசீந்திரனிடம் கதை கேட்க அலுவலகத்துக்கு வரச்சொல்லி இருக்கிறார் விஷால்.

அவர் வரச்சொன்ன நேரத்துக்குப் போய்விட்டார் சுசீந்திரன்.

ஆனால் விஷால் இல்லை. காத்திருந்தார். காத்துக்கொண்டே இருந்தார். நேரம் ஓடிக்கொண்டிருந்தது. மேலும் காத்துக்கொண்…………………………..டே இருந்தார்.

சுமார் 4 மணி நேரம் சுசீந்திரன் அங்கேயே காத்திருந்தும் கடைசிவரை விஷால் வரவே இல்லை.

செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததால் அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.

இந்த சம்பவம் நடைபெற்று இரண்டு நாட்கள் கழித்தே அலவலகத்துக்கு வந்திருக்கிறார் விஷால்.

உற்சாகமான விஷாலை ஓரு படத்தின் தோல்வி துவண்டுபோக வைத்துவிட்டது.

Comments

comments