saவிஷால், ஹன்சிகா, ரம்யா கிருஷ்ணன், கிரண், ஐஸ்வர்யா, சந்தானம், பிரபு நடிக்கும் ஆம்பள படத்தை சுந்தர்.சி இயக்கி உள்ளார். ஹிப் ஆப் தமிழா ஆதி இசை அமைத்துள்ளார். விஷால் பிலிம் பேக்டரி தயாரித்துள்ளது. படம் வருகிற பொங்கல் அன்று வெளிவருகிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் படத்தை பார்த்த தணிக்கை குழுவினர். படத்திற்கு யு சான்றிதழ் கொடுத்துள்ளனர். ஜாலியான படமாக இயக்கி உள்ளதாக இயக்குனர் சுந்தர்.சிக்கும், விஷாலுக்கும் பாராட்டு தெரிவித்துள்ளனர். யு சான்றிதழ் கிடைத்திருப்பதால் வரிவிலக்கிற்கு தயாரிப்பாளர் விஷால் விண்ணப்பித்துள்ளார்.

படத்தின் இறுதி கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. ஆம்பள படத்துடன் விக்ரம் நடித்துள்ள ஐ, ஜி.வி.பிரகாஷ்குமார் அறிமுகமாகும் டார்லிங் படமும் வெளிவருகிறது. தியேட்டர் நெருக்கடி நிலவுகிறது. என்றாலும் ஆம்பள படத்தை 300 தியேட்டர்களில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Comments

comments