saஅஜீத், அனுஷ்கா, த்ரிஷா நடித்த என்னை அறிந்தால் படத்தை கவுதம் மேனன் இயக்கி உள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். இதனை வருகிற பொங்கல் அன்று வெளியிட இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் அஜீத் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். விஷால் (ஆம்பள) விக்ரம் (ஐ) ஆகியோருடன் அஜீத் மோதுவதால் சினிமா வட்டாரத்திலும் சூடு கிளம்பியது. இந்த நிலையில் என்னை அறிந்தால் படம் திடீரென 29ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது.

தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் கூறும் காரணம் இது… “படத்தின் வேலைகள் பாக்கி இருக்கிறது. பின்னணி இசை சேர்ப்பு பணிகள் முடியவில்லை. மிக்சிங், கலர் கரெக்ஷன் வேலைகள் இருக்கிறது. பொங்கலுக்கு வெளியிட வேண்டுமென்றால் இவற்றை அவசர அவசரமா முடிக்க வேண்டும். இதனால் சிலவற்றில் சமரசம் செய்து கொள்ள வேண்டியது இருக்கும். அதனால் நிதானமாக முடித்து வெளியிடலாம் என்று 29ந் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறோம். வேறு எந்த காரணமும் இல்லை” என்கிறார். ஏ.எம்.ரத்தினம்.

 

Comments

comments