asசிவகார்த்திகேயன் இன்றைய இளம் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்படும் நாயகன் என்பதை யு டியூப் ரசிகர்களின் எண்ணிக்கையை வைத்தே கணக்கிட்டு விடலாம். சிவகார்த்திகேயன் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பே அவர் தொலைக்காட்சியில் நடத்திய ‘அது இது எது’ நிகழ்ச்சியியின் பல எபிசோடுகள், யு டியூபில் பல லட்சம் வாசகர்களை கவர்ந்ததாக விளங்கி வருகிறது. அவருக்கு அதுதான் அதிக ரசிகர்களை ஈர்க்கவும் அடித்தளமாக அமைந்தது.

இரண்டு வாரங்களுக்கு முன் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் ‘காக்கி சட்டை’ படத்தின் டிரைலர் யு டியூப் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. நேற்று அந்த டிரைலர் இரண்டு மில்லியன் ரசிகர்களால் பார்வையிடப்பட்டுள்ளது. அதே சமயம், சிவகார்த்திகேயனை இந்தப் படத்தில் நாயகனாக நடிக்க வைத்து படத்தைத் தயாரித்த தனுஷ் நடிக்கும் ‘அனேகன்’ படத்தின் டிரைலரும் இரண்டு வாரங்களுக்கு முன்பாக வெளியிடப்பட்டது. ஆனால், அந்த டிரைலரை இதுவரை 16 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் மட்டுமே பார்வையிட்டுள்ளனர்.

‘அனேகன்’ படத்தை கே.வி.ஆனந்த் இயக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையைமக்க, தனுஷ், கார்த்திக் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். அனுபவம் உள்ளவர்கள் இயக்கிய படமாக இருந்தாலும் இந்தப் படத்தை விட ‘காக்கி சட்டை’ படத்தின் டிரைலருக்குக் கிடைத்துள்ள வரவேற்பு, சிவகார்த்திகேயனைப் பார்த்து ‘அடேங்கப்பா….’ என்று ஆச்சரியப்பட வைக்கிறது.

 

Comments

comments