asதமிழ்ப்பட ஹீரோக்களுக்கு ஆந்திராவிலும் நல்ல மார்க்கெட் உருவாகி வருகிறது. நேரடி தெலுங்குப் படங்களுக்கு நிகராக தமிழ்ப்பட ஹீரோக்களின் தெலுங்குப் பதிப்பு படங்களையும் ஆந்திர ரசிகர்கள் ரசிக்கிறார்கள். எனவே தமிழில் வெளியாகும் அதே நாளில் தெலுங்குப்பதிப்பையும் வெளியிட வேண்டும் என்பதில் நம் ஹீரோக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அஜித் நடித்த ஆரம்பம், வீரம் போன்ற படங்கள் தமிழில் வெளியாகி ஒரு சில நாட்கள் கழித்தே தெலுங்கில் வெளியானது. ஆனால் அஜித், கௌதம் மேனன் கூட்டணி அமைத்துள்ள என்னை அறிந்தால் படத்தை தமிழில் வெளியாகும் ஜனவரி 29 ஆம் தேதி அன்றே தெலுங்கிலும் வெளியிட தீர்மானித்துள்ளனர். என்னை அறிந்தால் படத்தின் தயாரிப்பாளராக ஏ.எம்.ரத்னத்துக்கு தெலுங்குப்படத்துறையில் நெட்வொர்க் இருப்பதால் என்னை அறிந்தால் படத்தை ஆந்திராவில் புரொமோஷன் செய்யும் வேலைகளை துவங்கிவிட்டார். என்னை அறிந்தால் வெளியாகும் அன்றே தெலுங்கிலும் வெளியாக இருப்பதால் தெலுங்கு பதிப்பின் வேலைகளும் இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

என்னை அறிந்தால் படம் யென்டெ வாட கன்னி என்ற பெயரில் தெலுங்கிலும் வெளியாகவிருக்கிறது. யென்டெ வாட கன்னி படத்தை ஆந்திராவில் வெளியிடும் தயாரிப்பாளர் படத்தின் புரமோஷனுக்கு வரும்படி அனுஷ்கா, த்ரிஷாவை அழைத்துள்ளார். இருவருமே வர மறுத்துவிட்டனராம். இது தொடர்பாக ஏ.எம்.ரத்னத்திடம் அவர் முறையிட, அனுஷ்காவையும், த்ரிஷாவையும் சமாதானப்படுத்தி தெலுங்கு புரமோஷனுக்கு வரும்படி வற்புறுத்தி வருகிறாராம் ரத்னம்.

Comments

comments