chennnnஆலை இல்லா ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை என்பதுபோல், தகுதியான அமைப்புகள் இல்லாததினால் தனி நபர்கள் எல்லாம் திரைப்படவிழாக்களை நடத்தி வருகின்றனர்.

சில வெளிநாட்டுப்படங்களை வர வைத்து திரையிட்டுவிட்டு ‘சர்வதேச’ என்ற அடைமொழியைப் போட்டுக் கொண்டு செமத்தியாய் பணம் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டனர்.

இண்டோ சினி அப்ரிசேஷன் என்ற அமைப்பு சார்பில் கடந்த 11 ஆண்டுகளாக சென்னையில் நடத்தப்பட்டு வரும் சர்வதேச திரைப்பட விழாவும் இந்த வகைதான்.

ஒவ்வொரு வருடமும், தமிழக அரசுடன் நெருக்கமாக இருக்கும் திரைப்பட பிரமுகர்களை கையில் வைத்துக் கொண்டு அவர்கள் மூலம் மேலிடத்தை அணுகி, அரசாங்கத்திடமிருந்து லட்சக்கணக்கில் நிதி உதவியையும் பெற்று சர்வதேச திரைப்பட விழா நடத்துகிற பெயரில் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து வந்தனர்.

இந்த ஆண்டு, 12-ஆவது சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 18-ஆம் தேதி துவங்கி 25-ஆம் தேதி வரை 8 நாட்கள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் தமிழக அரசிடமிருந்து 50 லட்சம் நிதி உதவியை வாங்க திட்டமிட்டனர். அதற்காக, சிறந்த படத்துக்கு வழங்கப்படும் விருதுக்கு ‘அம்மா அவார்ட்’ என்று பெயர் வைத்தனர்.

அப்படியும் அவர்களின் பருப்பு வேகவில்லை என்பதுதான் லேட்டஸ்ட் தகவல்.

கடந்த காலங்களில் தமிழக அரசிடமிருந்து பண உதவி கிடைக்க காரணமானவர்களில் ஒருவரான சுஹாசினி போன்ற முக்கிய முகங்கள் எல்லாம் இம்முறை விலகிக்கொண்டுவிட்டனர்.



சரத்குமாரும் பட்டும்படாமல் ஒதுங்கிக் கொள்ள, வேறு சிலர் மூலம் போயஸ்கார்டனுக்கு சென்ற இண்டோ சினி அப்ரிசேஷன் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ‘மக்களின் முதல்வரிடம்’ திரைப்பட விழாவுக்கு நிதி உதவி கேட்டு மனு கொடுத்தனர். மனுவை அங்குள்ள அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர்.

திரைப்பட விழா தொடங்க இன்னும் இரண்டு நாட்களே உள்ளநிலையில், இதுவரை தமிழக அரசிடமிருந்து நிதி உதவி கிடைக்கவில்லை.

தமிழக அரசிடமிருந்து 50 லட்சம் கிடைக்கும், அதை வைத்து ஆடம்பரமாக செலவு செய்யலாம் என்று கனவில் இருந்தவர்களுக்கு செம அதிர்ச்சி.

இந்த ஆண்டு பட விழாவில் பிரான்ஸ், ஜெர்மனி, ஹங்கேரி, ஈரான், ஆஸ்திரேலியா, போலந்து, பிரேசில், பல்கேரியா, உட்பட 45 நாடுகளைச் சேர்ந்த 171 திரைப்படங்கள் திரையிடப்படவிருக்கின்றன. தவிர வெளியூரிலிருந்தும், வெளிநாட்டில் இருந்தும் அழைக்கப்பட்டுள்ள சிறப்பு விருந்தினர்களுக்கு உணவு தங்குமிட வசதி எல்லாம் செய்ய வேண்டும். தியேட்டர்களின் வாடகை வேறு. இதற்கெல்லாம் 20 லட்சம் தேவை.

தமிழக அரசு பண உதவி இல்லை என்று கைவிரித்ததால், திட்டமிட்டபடி திரைப்பட விழாவை தொடங்குவதிலும், நடத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

கடந்த காலங்களில் சம்பாதித்த பணத்தை வைத்து சொத்துக்கள் வாங்கிப் போட்டிருக்கிறார்களாம். அந்த சொத்துக்களை விற்று திரைப்பட விழாவுக்கு செலவு செய்வதுதான் இப்போதையை ஒரே வழி. அல்லது பணம் படைத்த தொழில்அதிபர்கள் தங்கள் வீட்டில் கொட்டிக்கிடக்கும் கருப்புப்பணத்தை நன்கொடையாக கொடுக்க வேண்டும்.

என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்..!

Comments

comments