iஷங்கர்-விக்ரம் கூட்டணியில் உருவாகியிருக்கும் பிரமாண்ட படம் ஐ. ஏற்கனவே இவர்கள் இணைந்த அந்நியன் படத்தை விடவும் பன்மடங்கு பிரமாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படத்திற்காக இரண்டறை ஆண்டுகளாக தனது உழைப்பை அர்ப்பணித்திருக்கிறார் விக்ரம். இப்படத்தின் ட்ரைலரைப் பார்த்து விட்டு, பாலிவுட், ஹாலிவுட் நடிகர்களெல்லாம் விக்ரமின் கடின உழைப்பைப் பார்த்துவிட்டு மிரண்டு போய் நிற்கிறார்கள்.

இந்த நிலையில், வருகிற பொங்கலுக்கு வருமா? வராதா? என்ற இரண்டுவிதமான கருத்துக்கள் நிலவி வந்த நிலையில், இப்போது கண்டிப்பாக ஐ படம் பொங்கலுக்கு வருகிறது. அதுவும் பொங்கல் ஜனவரி 14-நதேதி என்றால், 5 நாட்களுக்கு முன்பே அதாவது ஜனவரி 9-ந்தேதியை ஐ திரைக்கு வருவதாகவும் கூறுகிறார்கள்.

மேலும், ஒவ்வொரு ஏரியாவிலும் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளதாம். தற்போது வியாபாரம் சூடு பிடித்துள்ள நிலையில், சென்னை, செங்கல்பட்டு ஏரியாவை கல்பாத்தி அகோரமின் ஏஜிஎஸ் நிறுவனம் வாங்கியிருக்கிறது. அதுவும் இந்த ஏரியாக்களில் மட்டும் 175 தியேட்டர்களில் ஐ படத்தை வெளியிடுகிறார்களாம். அதோடு, 9-நதேதி ரிலீஸ் என்றால் அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே டிக்கெட் புக்கிங்கையும் முடுக்கி விடப்போகிறார்களாம்.

Comments

comments