sdsdaகன்னடப்படத் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடித்த லிங்கா ஒருவழியாக நாளை(டிச., 12ம் தேதி) வெளியாகிறது. லிங்கா படத்தின் கதை தொடர்பாக பலரும் வழக்கு தொடர்ந்தநிலையில் அத்தனை வழக்குகளையும் எதிர்கொண்டுவிட்டு நாளை வருகிறது லிங்கா. தமிழ்நாட்டில் மட்டும் 600 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படுகிறது. தமிழ்நாட்டைவிட கூடுதல் தியேட்டர்களில் ஆந்திராவில் வெளியாகிறது லிங்காவின் தெலுங்கு டப்பிங். 750 தியேட்டர்களில் வெளியாகிறது. நேரடி தெலுங்கு படங்களைவிட அதிக தியேட்டர்களில் வெளியாகிறது. கேரளாவில் 250 தியேட்டர்களில் லிங்கா தமிழ்ப்படம் வெளியாகிறது. கர்னாடகாவில் 200 தியேட்டர்களிலும், மும்பை டெல்லி உட்பட பல வட இந்திய நகரங்களில் 375 தியேட்டர்களிலும் வெளியாகிறது. வெளிநாடுகளில் மட்டும் 1000 தியேட்டர்களில் வெளியாகிறது. ஆக…உலகம் முழுக்க 3175 தியேட்டர்களில் லிங்கா வெளியாகிறது.

லிங்கா படத்தின் இந்தி பதிப்பு டிசம்பர் 20 அன்று வெளியாகிறது.

Comments

comments