DSபென்சில், டார்லிங் என இரண்டு படங்களில் நடித்து முடித்து விட்டார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார். இதில் பென்சில் படத்தில் பள்ளி மாணவனாக நடித்திருககும் அவர், டார்லிங் படத்தில் ஒரு பேயை பெண் என நினைத்து காதலிக்கும் வேடத்தில் நடித்திருக்கிறார். இது தெலுங்கில் சூப்பர் ஹிட்டான படத்தின் ரீமேக் என்பதால், இப்படத்தை அதிகமாக எதிர்பார்க்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார்.

ஆனபோதும், பென்சிலே தான் நடித்த முதல் படம் என்பதால் அந்த படத்திற்கு பிறகுதான் டார்லிங்கை வெளியிடப்போகிறாராம். ஆக, இப்போது இந்த இரண்டு படங்களும் ரிலீசுக்கு தயாராகி விட்டன. ஆனால் இந்த படங்களின் ரிசல்ட்டை பார்த்து விட்டுத்தான் அடுத்த படத்தில் நடிப்பேன் என்று காத்திருக்காமல் தனது 3வது பட வேலைகளையும் தற்போது தொடங்கியிருக்கிறார் அவர்.

த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா என்ற டைட்டிலில் உருவாகும அந்த படத்தில் ஜி.வி.பிரகாசுக்கு ஜோஜாடியாக அவன் இவன், பாகன், தெகிடி படங்களில் நடித்த ஜனனி அய்யர் நடிக்கிறார். மேலும், தான் நடித்துள்ள இரண்டு படங்களுக்குமே தானே இசையமைத்துள்ள அவர், அடுத்த படத்திற்கும் இசையமைத்து நடிக்கிறாராம். அதனால், தற்போது வேறு சில படங்களுக்கான பின்னணி இசைக்கோர்ப்பு பணிகள் ஈடுபட்டிருக்கும் ஜி.வி.பிரகாஷ், தனது புதிய படத்திற்கான பாடல் கம்போஸிங் வேலைகளையும தொடங்கியிருக்கிறாராம். அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே மொத்த பாடல்களையும் பதிவு செய்து விட திட்டமிட்டிருக்கிறாராம்.

 

 

Comments

comments