0ஒரு காலத்தில் 10 லட்சம் என்பதே நடிகர் நடிகைகளுக்கு தரப்படும் அதிகப்படியான சம்பளமாக இருந்தது ஆனால். இப்போது அப்படியல்ல, கோடிகளை சொல்லியடிக்கிறார்கள். அதேபோல், புதிதாக அறிமுகமாகும் படங்களில் ஓரிரு லட்சங்கள் கொடுத்தாலும் வாங்கிக்கொள்பவர்கள். இரண்டாவது படத்திலேயே ஐந்து லட்சம் கேட்கிறார்கள்.

அதிலும், அவர்கள் நடிதத படம் ஹிட் அடித்து விட்டால் கேட்கவே வேண்டாம். ஒரே படத்தில் 25 லட்சத்துக்கு தாவி விடுகிறார்கள். அப்படித்தான் கோலிசோடா படத்தில் நாயகனாக நடித்த ஸ்ரீராம் இப்போது 25 லட்சம் சம்பளம் கேட்கிறாராம். கமர்கட்டு என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் அவரை சமீபத்தில் சந்தித்த சில டைரக்டர்கள் அவர் சொன்ன சம்பளம் அதிகமாக இருப்பதாக சொல்லி திரும்பியிருக்கிறார்கள்.

ஆனபோதும், இறங்கி வரவில்லையாம் ஸ்ரீராம், நான் நடித்து வரும் இந்த கமர்கட்டு படமும் கண்டிப்பாக வெற்றி பெறும். அதனால் இப்போது 25 லட்சத்தையே அதிகமாக நினைத்து திரும்பிச்சென்ற அவர்கள் அடுத்து எனது வெற்றியைப்பார்த்து மீண்டும் என்னை வைத்து படம் பண்ண வருவார்கள் என்று சொல்லிக்கொண்டிருக்கிறாராம்.

Comments

comments