anirudh-is-the-youngest-brand-ambassadorஇந்த ஆண்டில் எண்ணற்ற படங்கள் வெளிவந்து பல இசையமைப்பாளர்கள் அறிமுகமாகினாலும், வெளிவந்த படங்களைப் பார்க்கும் போது அனிருத்தின் இசையில் வெளிவந்த படங்கள் மியுசிக்கலாகவும், பெரிய ஹிட்டாகியுள்ளன. அவர் இசையமைத்து வெளிவந்த படங்கள் வியாபார ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கின்றன. அந்த விதத்தில் அனிருத்துக்கு “வேலையில்லா பட்டதாரி, மான் கராத்தே, கத்தி” ஆகிய படங்கள் பெயர் வாங்கிக் கொடுத்த படங்களாக அமைந்துவிட்டது. கடந்த வாரம் வெளியான ‘காக்கி சட்டை’ படத்தின் பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படம் பொங்கலுக்கு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழில் தற்போது மேலும் நான்கு படங்களுக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். 2011ல் இசையமைப்பாளராக அறிமுகமாகி 10 படங்களுக்கு இசையமைத்து முடிப்பதற்குள்ளாகவே ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் கூட்டணியில் ‘கத்தி’ படத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்க, அதைச் சரியாகவும் பயன்படுத்திக் கொண்டார். அந்த வெற்றி, அவரைத் தற்போது முருகதாஸ் மூலம் ஹிந்தியிலும் அறிமுகப்படுத்தி வைக்க உள்ளது.

இந்த ஆண்டின் வருடக் கடைசியில் வெளிவந்த அனைத்துப் படங்ளின் இசைகளைப் பற்றி அலசப்படும் போது இசையமைப்பாளர்களில் அனிருத்தும் கண்டிப்பாக இருப்பார். ‘காக்கி சட்டை’ படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்புக்கு நன்றி தெரிவித்துள்ள அனிருத், 2014ம் ஆண்டு ஒரு கனவு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Comments

comments