unnamed (23)மகிழ் திருமேனி இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள ‘மீகாமன்’ திரைப்படம் வருகிற 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் ரிலீசாக திரைக்கு வரவிருக்கிறது. உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் இப்படத்தை பார்த்துள்ளார். அவருக்கு படம் மிகவும் பிடித்துவிட்டதாம்.

இதனை தொடர்ந்து அவர் ‘மீகாமன்’ பட ஹீரோ ஆர்யா, ஹீரோயின் ஹன்சிகா, இயக்குனர் மகிழ் திருமேனி மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இப்படம் வித்தியாசமான ஆக்‌ஷன் படமாக உருவாகி இருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படத்தில் ஆர்யா கிட்டத்தட்ட 15 வில்லன்களை சமாளிக்கும் படு ஆக்‌ஷன் கேரக்டரில் நடித்துள்ளாரம்.

Comments

comments