kayyyமைனா, கும்கி வெற்றிப் படங்களை அடுத்து பிரபுசாலமன் இயக்கும் படம் கயல். லிங்கா படத்தில் நஷ்டமடைந்ததாக புலம்பிக்கொண்டிருக்கும் திரையரங்க அதிபர்கள் மத்தியில் கயல் படம் நிச்சயம் வெற்றியடையும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. டிசம்பர் 25 ஆம் தேதி அன்று மீகாமன், வெள்ளைக்கார துரை உட்பட வேறுசில படங்கள் வெளியாகின்றன. ஆனாலும், கயல் படத்தை தியேட்டர்களில் வெளியிடுவதில்தான் திரையரங்கத்தினர் மத்தியில் போட்டி நிலவுவதாக விநியோகஸ்தர்கள் தரப்பில் சொல்கின்றனர்.. திரையரங்கத்தினர் மத்தியில் கயல் படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டதற்கு மற்றொரு காரணமாக, அப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ், பி.மதனை குறிப்பிடுகின்றனர்! மதன் இதற்கு முன் தயாரித்த அத்தனை படங்களும் வசூலில் சாதனை படைத்தன. அது மட்டுமல்ல, தனுஷிடமிருந்து அவர் வாங்கி வெளியிட்ட வேலையில்லா பட்டதாரி படமும் சூப்பர் ஹிட்டாகி ஓடி தியேட்டர்காரர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் பெரிய லாபத்தைத்தேடிக்கொடுத்தது. இதன் காரணமாக, பி.மதன் தயாரிப்பில் தயாராகி உள்ள கயல் படத்துக்கும் அதிக அளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது! 625 திரையரங்குகளில் கயல் படம் வெளியாகிறது.

மைனா, கும்கி உட்பட பிரபுசாலமன் இதுவரை இயக்கிய அனைத்து படங்களும் 5 கோடிக்குள் அதாவது சிறுமுதலீட்டில் எடுக்கப்பட்ட லோ பட்ஜெட் படங்கள். பிரபுசாலமன் முதன்முறையாக மிகப்பெரிய பட்ஜெட்டில் இயக்கும் படம் கயல்தான். இப்படத்தின் பட்ஜெட் 15 கோடி. கயல் படத்தில் மிகவும் பிரம்மாண்டமான சுனாமி காட்சி ஒன்று இடம்பெறுகிறது. செயற்கையான சுனாமி யை உருவாக்கி ஏறக்குறைய 45 நாட்கள் படமாக்கப்பட்டது இந்தக்காட்சி. இந்த சுனாமிக்காட்சிக்கு கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு மட்டுமே 3.5 கோடி செலவிடப்பட்டிருக்கிறதாம்.

கயல் டிரைலர் உங்கள் பார்வைக்கு :  

Comments

comments