arnold-schwarzenegger-with-bodybuilding_141095352630150 கோடி செலவில் ஷங்கர் இயக்கியுள்ள படம் ஐ. இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பிருந்தே அப்படத்தில் நடிக்கும் கலைஞர்களை தயார்படுத்தத் தொடங்கி விட்டார் அவர். குறிப்பாக, பாடி பிலடர்கள் சம்பந்தப்பட்ட கதை என்பதால், இந்த படததில் விக்ரமை சிக்ஸ்பேக்கிற்கு மாற்றிய அதே நேரம், படத்தில் நடித்துள்ள பாடி பில்டர்கள் 200 பேரையும் இந்தியாவிலுள்ள பல மாநிலங்களில் இருந்து சேகரித்து வந்திருக்கிறார்.

அதோடு, அவர்கள் அத்தனை பேரையும் 4 மாதங்களாக தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து அவர்களை கதைக்கேற்ற பாடி பில்டர்களாக மாற்றியிருக்கிறார். அதற்காக 200 பேருக்கும் 4 மாதங்களாக தேவையான உணவுகளை விருந்து போன்று தனது கம்பெனி செலவிலேயே செய்து கொடுத்திருக்கிறர்ர்.

அந்த வகையில், அவர்களுக்கு ஒரு நேரத்துககு சிக்கன், மட்டன் கொடுக்க வேண்டும் என்றாலும், 100 கிலோ, 150 கிலோ என்று எடுத்து சமைத்து கொடுக்கப்பட்டதாம். அதேபோல் காய்கறிகள் என்றால், வண்டி வண்டியாக கொண்டு இறக்கினார்களாம். அந்த அளவுக்கு அவர்களுக்கு தேவையான உணவுகளாக கொடுத்து 4 மாதத்தில் அவர்களை முழு பாடி பில்டர்களாக உருவாக்கியிருக்கிறார் ஷங்கர்.

ஆனால், அப்படி அவர் இவர்களை தயார்படுத்த செய்த செலவு கணக்கைப்பார்த்தால் இரண்டு லோ பட்ஜெட் படமே எடுத்து விடலாம் என்கிறார்கள். இதேபோல், விக்ரம், எமிஜாக்சன் என ஒவ்வொருவருக்கும் நடிப்பு தவிர இதர தேவைகளுக்காகவே பெரும் செலவு செய்யப்பட்டுதான் ஐ படம் பிரமாண்டமாக வளர்ந்து நிற்கிறதாம்.

Comments

comments