idhu-enna-mayam-stills-photos-pictures-01சைவம் படத்திற்கு பிறகும், அமலாபாலை திருமணம் செய்து கொண்ட பிறகும் விஜய் இயக்கும் புதிய படத்தில் விக்ரம் பிரபுவும், முன்னாள் நடிகை மேனகாவின் மகள் கீர்த்தி சுரேசும் நடித்து வருகிறார்கள். இதன் முதல் கட்ட படப்பிடிப்புகள் கேரளாவின் பல பகுதிகளில் நடந்த முடிந்திருக்கிறது.

இதுவரை இந்தப் படத்திற்கு தலைப்பு வைக்காமல் இருந்தார்கள். தற்போது படத்தின் தலைப்பு இது என்ன மாயம் என்று அறிவித்திருக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார், நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி எடிட் செய்கிறார். மேஜிக் பிரேம்ஸ் லிஸ்டின் ஸ்டீபன், ராதிகா சரத்குமார் இணைந்து தயாரிக்கிறார்கள். விஜய்யின் திங் பிக் ஸ்டூடியோ பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தயாரித்துக் கொடுக்கிறது. இரண்டாது கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் நடக்கிறது.

Comments

comments