lingaaலிங்கா படத்தில் தங்கள் தலைவரின் ஆக்ஷனைக் காண ஆவலுடன் காத்திருக்கும் ரஜினி ரசிகர்கள், முதல் நாள் முதல் காட்சியை நள்ளிரவு 12 மணிக்கே காணத் தயாராகி வருகின்றனர்.

சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து ஏரியாக்களிலுமே லிங்காவுக்கு நள்ளிரவு 12 அல்லது 1 மணி மற்றும் அதிகாலை 4.30 மணி சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

லிங்கா வெளியாகும் அத்தனை அரங்குகளிலுமே இந்த சிறப்புக் காட்சிகள் நடக்கின்றன. அந்தந்த பகுதி ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் இந்த காட்சிகளுக்கான டிக்கெட்டுகளை வாங்கியுள்ளனர். அதிகாரப்பூர்வமான ரிசர்வேஷன் இன்றிலிருந்துதான் என்றாலும், மூன்று நாட்களுக்கு முன்பிருந்தே சிறப்புக்காட்சிக்கான டிக்கெட்டுகள் விற்கப்பட்டுவிட்டன.

சென்னையில் காசி, சைதை ராஜ், பரங்கிமலை ஜோதி, குரோம்பேட்டை வெற்றி, ஏஜிஎஸ் உள்ளிட்ட அரங்குகளில் நள்ளிரவுக் காட்சிகள் நடக்கின்றன. சில அரங்குகளில் அதிகாலை 4.30 மணிக் காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலையில் ரஜினி பிறந்த நாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டியிருப்பதால் பெரும்பாலான ரசிகர்கள் இந்த நள்ளிரவு மற்றும் அதிகாலை சிறப்புக் காட்சிகளையே விரும்புகின்றனர்.

Comments

comments