adhaaru‘என்னை அறிந்தால்’படத்தின் சிங்கிள் டிராக்கான ‘அதாரு அதாரு…உதாரு…’ என்ற பாடல் சற்றுமுன் வெளியிடப்பட்டது. அஜித் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக்காத்துக் கொண்டிருந்த இந்த சிங்கிள் டிராக் பற்றிய செய்தி வெளியானதுமே அஜித் ரசிகர்கள் அதைப்பற்றிய பரபரப்பை ஆரம்பித்து வைத்துவிட்டனர். டிவிட்டரில் கூட “செலிப்ரேட்டிங் என்னை அறிந்தால் சிங்கள் மற்றும் அதாரு அதாரு” ஆகிய ‘ஹேஷ்டேக்’குகளை இந்தியஅளவில் டிரெண்டிங்கில் இடம்பெற வைத்துவிட்டனர்.

சிறிய இடைவெளிக்குப்பிறகு இயக்குனர் கௌதம்மேனன் – ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணி மீண்டும் இந்தப்படம் மூலம் இணைந்திருப்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அஜித் படங்கள் என்றாலே பாடல்கள் அதிரடியாக இருக்கும் என்பதும் ஏற்கெனவே அறிந்த விஷயம் தான்.இந்த ‘அதாரு…அதாரு…’ பாடலும் மிகவும் அதிரடியாக அமைந்துள்ளது என ரசிகர்கள் இப்போதே கமெண்ட்டுகளை அள்ளித்தெளிக்க ஆரம்பித்துவிட்டனர்.

இன்னும் சில நாட்களுக்கு ‘லிங்கா ஃபீவர்’-ஐயும் மீறி அஜித்தின் ‘அதாரு… உதாரு… அமர்க்களப்படுத்துமா…..! பொறுந்திருந்து பார்ப்போம்…!!

Comments

comments