ar2256Ravikumarலிங்கா வெளியீட்டில் படுபிசியாக இருந்த இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம், ராணா படம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில், ‘ரஜினிக்கு ‘கோச்சடையான்’ முடிஞ்சதும் திரும்ப ஒரு ஹிஸ்ட்டாரிக்கல் படத்துல நடிக்க விருப்பம் இல்லை. சோஷியல் எலிமெண்ட்ஸ் உள்ள சப்ஜெக்ட்டில் நடிக்கலாம்னு முடிவெடுத்தார்.

அதற்காக வெளியில பல பேரிடம் கதைகள் கேட்டார். நேரம் கிடைக்கும்போது அடிக்கடி என் ஆபீஸ் பக்கம் வருவார். நான்தான் பொன். குமரன் கிட்ட ஒரு கதையிருக்கு கேட்டு பாருங்கனு சொன்னேன். உடனே கேட்டார். பிடித்து விட்டது. ‘ஏன் என்கிட்ட இத முன்னாலயே சொல்லல?’னு சொன்னார். ‘எப்ப நமக்கு எது வாய்க்கிறதோ அப்பதான் அது நமக்கு கிடைக்கும்’னு சொன்னேன். உடனே நான் பண்ண இருந்த சுதீப் புராஜெக்ட்டை ஒத்தி வச்சுட்டு ஷூட்டிங் போனோம்.

‘ராணா’ திரும்ப வருமா? அவர் நடிப்பாரா? எதுவுமே எனக்குத் தெரியாது. ரஜினி தான் சொல்லணும். சினிமாவில் நாம எதையுமே முன்கூட்டியே திட்டம் போட முடியாது. ‘ஜக்குபாய்’ கேன்சல் ஆகும்னா நாம ஆரம்பிச்சோம்? ‘ராணா’ ட்ராப் ஆகும்னா ஆரம்பிச்சோம்? நான் சில வருஷமா சும்மா இருப்பதை பார்த்துவிட்டு ‘நீங்க ஒரு ஹிந்தி படம் டைரக்ட் பண்ணுங்க’னு ஐடியா கொடுத்ததே ரஜினிதான்.

நடுவுல, ரெண்டு மூணு ஹிந்தி படத்தை ரீமேக் செஞ்சு ரஜினி நடிக்கலாம்னு டிஸ்கஷன்லாம் பண்ணோம். அப்புறம் வேண்டாம்னு நிறுத்திட்டோம். திரும்ப ‘லிங்கா’ புதுசா உள்ளே வந்தது! இப்போதைக்கு ‘ராணா’ ஒரு பாட்டு ஷூட் பண்ணதோட நிற்கிறது. பார்ப்போம்.’ என்று அவர் கூறினார்

Comments

comments